குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
By DIN | Published On : 26th April 2019 03:15 AM | Last Updated : 26th April 2019 03:15 AM | அ+அ அ- |

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு கிங் மேக்கர்ஸ் அகாதெமியில் பாராட்டு விழா நடைபெற்றது.
2018-ஆம் ஆண்டுக்கு 980 பணியிடங்களை நிரப்புவதற்காக அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் தமிழக அளவில் சி.ஏ. ரிஷப் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். டி. சித்ரா, இந்திய அளவில் நேர்முகத் தேர்வில் முதலிடம் பிடித்தார்.
இதேபோல, மல்லரப்பு நவீன், தீபன விஸ்வேஸ்வரி, கே.வி. ராஜ்குமார், எஸ். தமிழ் ஓவியா, அபிஷேக் ஆஸ்வால், வீரப்பள்ளி வித்யாதர், எஸ். தருண்குமார், ஆர். அசோக்குமார், எம். பிருத்விராஜ், ஜி. பிரியங்கா, ஏ. கோவிந்தராஜ், என். பொன்மணி, நித்யா ராதாகிருஷ்ணன், வர்ஷா சலாற்றே, ஹரி பிரசாந்த், எம்.டி. தளபதி ராம்குமார், விஜயேதா தினகரன் ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர்.
இவர்களை கௌரவிக்கும் வகையில் கிங் மேக்கர்ஸ் அகாதெமியில் செவ்வா ய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஐஏஎஸ் அதிகாரிகள் சிவசைலம், பாலச்சந்திரன், விவேக் ஹரிநாராயண், ஐஎப்எஸ் அதிகாரி உபாத்யாய், பெனோசெபின் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
மாணவர் சேர்க்கை: கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறியது: நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் மே 13ஆம் தேதி, ஜூன் 10ஆம் தேதி என இரு நிலைகளில் தொடங்கவுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை ஏப்.28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமல்லாது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். திருச்சி, மதுரை, சென்னை கிளைகளில் பயிற்சிக்கான முழு விவரங்களை பெறலாம் என்றார் அவர்.