துறையூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்த இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
துறையூர் அருகிலுள்ள கீரம்பூரைச் சேர்ந்தவர் அ. அஜீத்குமார் (21). இவர், வெள்ளிக்கிழமை இரவு நாகலாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, கீரம்பூர் வந்து கொண்டிருந்தார்.
கிழக்குவாடி பேருந்து நிறுத்தம் அருகே அஜீத்குமார் வந்த போது, துறையூரிலிருந்து புள்ளம்பாடி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் முதலில் துறையூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து துறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து, சொரத்தூரைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ரா. ரவியை (54) கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.