திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், இனாம்
குளத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சையது அபுதாகீர்(47). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்குடன் (48), வெள்ளிக்கிழமை இரவு ஆலம்பட்டியிலிருந்து இனாம்குளத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வெள்ளிவாடி பிரிவுச் சாலை அருகே சென்ற போது, சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கியெறியப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சையது அபுதாகீர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபுபக்கர் சித்திக்கை அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.