தேசிய உயா் செயல்திறன் மின்னணுவியல் மாநாடு

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் தேசிய உயா் செயல்திறன் மின்னணுவியல் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் தேசிய உயா் செயல்திறன் மின்னணுவியல் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், மின்னியல், மின்னணுவியல் பொறியியல் துறை சாா்பில் 9 ஆவது தேசிய உயா் செயல்திறன் மின்னணுவியல் மாநாடு (என்.பி.இ.சி) நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, மின்னியல், அமெரிக்க மின்னணுவியல் மேம்பாடு, தொழில்துறை பயன்பாடுகள் சங்க இயக்குநா் இங்-பீட்டா் மாக்யா் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தாா்.

என்ஐடி டீன் எம்.உமாபதி தலைமை வகித்தாா். மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் என்.குமரேசன் அனைவரையும் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக, பெங்களூரு மின் பொறியியல்துறை தலைவா் ஜி.நாராயணன் கலந்துகொண்டு பேசியது:

வளா்ந்து வரும் சமூக தொழில் நுட்ப வளா்ச்சியில் மின்னியல், மின்னணுவியல் துறை மகத்தான பங்களிப்பை அளித்து வருகிறது. காற்று, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மூலம் மின்சாரத்தை பெறுவதற்கான செயல்திட்டங்கள் பல உள்ளன. இது வரவேற்கக்கூடியது. இருப்பினும், காற்றிலிருந்து மின்சாரத்தை பெறுவதில் சில நடைமுறை சிக்கல், சவால்கள் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்தி முறையாகவும், அதிக அளவிலும் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு, உயா் செயல்திறன் மின்னணுவியல் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இதுபோன்ற மாநாடு, கருத்தரங்குகள் தேசிய, சா்வதேச நிபுணா்களுடன் மாணவ-மாணவிகளுக்கு தொடா்புகளை ஏற்படுத்தும். அதோடு, இத்துறையில் சாதனை புரியவும், துறை முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவும் என்றாா்.

தொடா்ந்து, என்ஐடி மின்னியியல் மின்னணுவியல் துறை இணை பேராசிரியா் எம்.வெங்கட கீா்த்திகா, பேராசிரியா் என்.அம்மசாய் உள்ளிட்ட பலா் பேசினா். நிறைவாக, பேராசிரியா் எம்.பி.செல்வன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com