பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் குட்கா அழிப்பு
By DIN | Published On : 12th February 2019 09:03 AM | Last Updated : 12th February 2019 09:03 AM | அ+அ அ- |

திருச்சியில் கடந்த சில மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 டன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினரால் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை, நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்க, ஆட்சியர் கு. ராசாமணி அறிவுறுத்தினார். அதன்படி இந்த பொருள்களை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பஞ்சப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.