மணப்பாறையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 12th February 2019 09:01 AM | Last Updated : 12th February 2019 09:01 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கரூர் மக்களவை, மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முன்னாள் அரசு கொறடாவும், மாவட்டச் செயலாளருமான ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அமமுக தலைமை நிலைய செயலாளரும், கரூர் மக்களவை தொகுதி பொறுப்பாளருமான பி.பழனியப்பன் பேசியது:
அம்மா இருந்தவரை மதவாத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் இருந்து காட்டினார். அதே நிலைப்பாட்டில் தான் அமமுகவும் உள்ளது. அதிமுகவில் தற்போது சந்தர்ப்பவாதிகள் தான் உள்ளனர். தலைமை பண்பு கொண்ட தகுதிவாய்ந்த ஒருவர் கூட இல்லை என்றார்.
நிகழ்ச்சியில், அமமுக அவைத்தலைவர் எஸ்.அன்பழகன், கரூர் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல், ஒன்றியச் செயலாளர்கள் பி.ஆர்.எம்.பெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர் பழ.துளசிசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.