விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியர் வேண்டுகோள்
By DIN | Published On : 12th February 2019 09:02 AM | Last Updated : 12th February 2019 09:02 AM | அ+அ அ- |

மத்திய அரசு அளிக்கும் ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி உரிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தத் திட்டம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் பிப்.11 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியான விவசாயிகள் அனைவரும் அவரவர் பகுதிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகலாம். வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், அலைபேசி எண், பட்டா விவரங்களை வழங்கி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.