ஸ்ரீரங்கத்திற்குள் செல்லும் வாகனங்களுக்கு ஏப்.1 முதல் நுழைவுக் கட்டணம் ரத்து
By DIN | Published On : 12th February 2019 09:00 AM | Last Updated : 12th February 2019 09:00 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் பகுதிக்குள் நுழையும் வாகனங்களுக்கான நுழைவுக்கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கத்திற்குள் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நுழைவுக்கட்டணம் வசூலிப்பதை தடைசெய்யக்கோரி ஏற்கெனவே பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நுழைவுக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.