முன்னோடி சாதனை பெண்மணி விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழக  முன்னோடி பெண்மணி விருது -2019 பெறுவதற்கு சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக  முன்னோடி பெண்மணி விருது -2019 பெறுவதற்கு சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாரதிதாசன் பல்கலைக்கழக  மகளிரியல் துறை மூலம் ஆண்டு தோறும்  பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு  முன்னோடிப் பெண்மணி விருது வழங்கப்படுகிறது. 
2019ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுமையான வழிகளில் செயல்பட்டு சமூக மேம்பாட்டுக்கு பங்களித்துவரும் சாதனைப் பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். கலை, அறிவியில், மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பம், சமூக சேவை, சமூகப்போராளிகள்,  மகளிர்தொழில் முனைவோர், சுயஉதவிக்குழு பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள்,  திருநங்கைகள், மகளிர் தலைவர்கள்,  அலுவலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரும், மகளிர் தலைமையில் இயங்கி பொதுச் சேவை புரியும் தொண்டு நிறுவனத்தினரும் விண்ணப்பிக்கலாம். 
தன் விவரக்குறிப்புகளுடன் , பெயர், முகவரி,  அலைபேசி எண்ணுடன்  5 பக்கங்களில் விரிவாக அச்சிட்டு உரிய சான்றிதழ்கள் ஆவணங்களின் நகலுடன் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இயக்குநர் மற்றும் தலைவர்,  மகளிரியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  காஜாமலை வளாகம், திருச்சி - 23. மேலும், விவரங்களுக்கு  0431-2420357. 0431-2333223, 9841552799, 9443923839 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com