காலமானார்: என். சடகோபன்
By DIN | Published On : 30th July 2019 09:55 AM | Last Updated : 30th July 2019 09:55 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சேர்ந்த ஸ்ரீ நடாதூர் ரெங்காச்சாரி சடகோபன் (90) திங்கள்கிழமை (ஜூலை 29) காலமானார்.
ஸ்ரீ வானமாமலை மடத்தின் சீடரும், விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவருமான இவர், ஸ்ரீரங்கத்திலுள்ள தனது மகன் என்.எஸ். ரெங்காச்சார் இல்லத்தில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு காலமானார்.
இவரது திருமேனி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை திருமங்கை மன்னன் சந்நிதியில் கைங்கர்யம் அனுசரிக்கப்படுகிறது.
மறைந்த சடகோபனுக்கு என்.எஸ். ரெங்காச்சார், என்.எஸ். திருமலைநாதன் என இரு மகன்களும், 4 மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர். தொடர்புக்கு: 99400 16743, 73586 05368.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...