சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 10:09 AM | Last Updated : 14th June 2019 10:09 AM | அ+அ அ- |

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்தால் நடக்கும் பழி வாங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிஐடியு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு சங்க மாநகர் மாவட்டச் செயலர் ராமர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட செயலர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்தால் தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டது.