மறு முத்திரையிடப்படாத தராசுகள், எடைக் கற்கள் பறிமுதல்
By DIN | Published On : 02nd March 2019 08:19 AM | Last Updated : 02nd March 2019 08:19 AM | அ+அ அ- |

திருச்சியில் தொழிலாளர் நலத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடப்படாத தராசுகள் மற்றும் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் த. தர்மசீலன், ஆலோசனையின் பேரில் உதவி ஆணையர் இரா. சதீஷ்குமார் தலைமையிலான 35 பேர் கொண்ட குழுவினர், திருச்சி மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மறு முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் 10, எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில்லரை விலை விவரங்கள் குறிப்பிடாத இரு கடைகளுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று மறு முத்திரையிடாத வணிகர்கள், தொழிலாளர் நலத்துறை அமலாக்கப்பிரிவு நடவடிக்கைக்கு உள்ளாகாத வகையில் தராசுகள் மற்றும் எடைக்கற்களுக்கு ஆண்டுதோறும் மறு முத்திரையிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.