டாஸ்மாக் கடையில் தீ விபத்து
By DIN | Published On : 06th March 2019 09:40 AM | Last Updated : 06th March 2019 09:40 AM | அ+அ அ- |

திருச்சி தென்னூர் டாஸ்மாக் கடையில் மின்கசிவால் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.
தென்னூர் பகுதியிலிருந்த டாஸ்மாக் மதுக்கடையில் செவ்வாய்க்கிழமை மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் லியோ ஜோசப் மற்றும் வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து தில்லைநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.