மது விற்ற முதியவர் கைது
By DIN | Published On : 06th March 2019 09:45 AM | Last Updated : 06th March 2019 09:45 AM | அ+அ அ- |

முசிறியில் அனுமதியில்லாமல் மதுவிற்ற முதியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
முசிறி காவல் ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் போலீஸார் முசிறி-தா.பேட்டை சாலையிலுள்ள நெசவாளர் காலனியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது விற்ற ஆ.குமாரசாமியை (63) கைது செய்து, அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.