மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.3லட்சம் உதவி
By DIN | Published On : 06th March 2019 09:39 AM | Last Updated : 06th March 2019 09:39 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் மனம் திருந்தி வாழும் மதுவிலக்கு குற்றவாளிகள் 12 பேருக்கு சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட்டது.
இருவருக்கு பெட்டிக்கடை நடத்த தலா ரூ.30 ஆயிரம், 10 பேருக்கு ஆடு வளர்த்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள ரூ.3 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார்.
கலால் பிரிவு உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.