கரூர் - ஈரோடு ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்
By DIN | Published On : 22nd March 2019 08:29 AM | Last Updated : 22nd March 2019 08:29 AM | அ+அ அ- |

கரூர் - ஈரோடு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மார்ச் 22, 26 மற்றும் 29 ஆகிய நாள்களில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி, ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது :
திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56841) கரூர் - ஈரோடு இடையே மார்ச் 22, 26, 29 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு -திருச்சி பயணிகள் ரயில் (56712) , ஈரோட்டிலிருந்து சேலம் - நாமக்கல் வழியாக கரூரை அடைகிறது. இதனால் ஈரோடு - கரூர் இடையிலான பாசூர், உஞ்சலூர், கொடுமுடி, புகழூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது. ஆனால் நாகர்கோவில் - மும்பை சென்ட்ரல் விரைவு ரயில் (எண். 16340) மார்ச் 22 வெள்ளிக்கிழமை மற்றும் மார்ச் 29 ஆகிய இரு தேதிகளில் ஈரோடு - கரூர் இடையே 15 முதல் 25 நிமிடங்கள் நின்று செல்லும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...