கல்லூரி மாணவியிடம் 6 பவுன் செயின் பறிப்பு
By DIN | Published On : 22nd March 2019 08:30 AM | Last Updated : 22nd March 2019 08:30 AM | அ+அ அ- |

திருச்சி அருகே குண்டூரில் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சிந்துஜா(22). இவர், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். வியாழக்கிழமை கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தார். மாத்தூர் ரவுண்டானா அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...