துறையூரில் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 22nd March 2019 08:29 AM | Last Updated : 22nd March 2019 08:29 AM | அ+அ அ- |

துறையூர் வருவாய் துறை சார்பில் தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
துறையூர் வட்டாட்சியர் பிரகாஷ் பேரணியை தொடக்கி வைத்தார். துறையூர் நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களித்தல், பணம், பரிசு பெறாமல் வாக்களித்தல் உள்ளிட்ட தேர்தல் மற்றும் வாக்காளர் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் பாலக்கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சியரகம் வரை சென்றனர். பேரணியில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஆனந்த், மண்டலத் துணை வட்டாட்சியர்கள் தனலட்சுமி, நடராஜ் உள்ளிட்ட வருவாய் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஜெமீன்தார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...