தேர்தல் விதி மீறல்: எஸ்டிபிஐ கட்சியினர் 9 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 22nd March 2019 08:32 AM | Last Updated : 22nd March 2019 08:32 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, போலீஸார், பறக்கும்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை வெஸ்டரி ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் கொடியேந்தி வந்ததாகவும், அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாகவும் உதவி ஆய்வாளர் இளங்கோவன் புகார் அளித்தார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்பதற்காக அக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஹசன் உள்ளிட்ட 9 பேர் மீது அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...