பொதுத்துறை நிறுவனங்களிடையே கைப்பந்து போட்டி
By DIN | Published On : 22nd March 2019 08:29 AM | Last Updated : 22nd March 2019 08:29 AM | அ+அ அ- |

பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சி பெல் நிறுவன நகரியத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அகில இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான, 2018-19ஆம் ஆண்டுக்கான கைப்பந்து போட்டிகள் திருச்சி பெல் நகரிய மனமகிழ் மன்றத்தில் நடத்தப்படுகின்றன.
ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய நிலக்கரி நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், ஆயில் இந்தியா லிமிடெட், பெல் நிறுவனம் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக போட்டியிடுகின்றன. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பெல் நிறுவன மனிதவளப்பிரிவு பொது மேலாளர் ஏ.எஸ். சமத் போட்டிகளைத் தொடக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஊழியர்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வு, பங்களித்தல், பணி நெறிமுறை, கலாசாரம், கூட்டு முயற்சி, தனி வாழ்வில் முன்னேற்றம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் ஆகியவற்றுக்கு இந்த போட்டி வாய்ப்பாக அமைந்திருப்பதாக சமத் தெரிவித்தார். பொறியியல் துறை பொது மேலாளர் பி. பாலசுப்பிரமணியன், மனமகிழ் மன்ற துணைத் தலைவர் பூபாலனும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...