100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
By DIN | Published On : 28th March 2019 07:54 AM | Last Updated : 28th March 2019 07:54 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மணப்பாறையில் 11 கி.மீ. தொலைவுக்கு தொடர் ஜோதி ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மணவை மாரத்தான், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தடகளக் குழு, வருவாய் மற்றும் காவல்துறைகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தை, வட்டாட்சியர் பன்னீர்செல்வம், போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பாண்டிவேலு, வருவாய் ஆய்வாளர்கள் வைதேகி, கந்தசாமி, ஆசிரியர் லெட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெரியார் சிலை திடலில் தொடங்கிய தொடர் ஜோதி ஓட்டம், புதுத்தெரு, கச்சேரி சாலை, ராஜவீதி, விராலிமலை சாலை, மாவட்ட பொது மருத்துவமனை, பாரதியார் நகர், பழைய காலனி, கோவில்பட்டி சாலை வழியாக 11 கி.மீ. தொலைவு சென்று மீண்டும் பெரியார் சிலை திடலில் நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், வருவாய், காவல்துறையினர், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...