உப்பிலியபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை சரியாக மூடாமல் சென்றதால், வங்கி மேலாளரின் செல்லிடப்பேசிக்கு எச்சரிக்கை அறிவிப்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பிலியபுரம் கடைவீதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த இயந்திரம் பழைய மாதிரி இயந்திரம் என்று கூறி, அதிலிருந்த ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை வங்கி முகமைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை எடுத்துவிட்டு, புதிய இயந்திரத்தை அங்கு வைத்துச் சென்றனர். இந்த நிலையில், பழைய இயந்திரத்தை சரியாக மூடாமல் சென்றதால் வங்கி மேலாளரின் செல்லிடப்பேசிக்கு நள்ளிரவில் தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்தவாறு இருந்தது. இதையடுத்து அவரது தகவலின் பேரில், வங்கிப் பணியாளர்கள் உப்பிலியபுரம் கடைவீதியிலுள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று கருவியை சரியாக மூடச் சென்றனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த காவல் ஆய்வாளர் குருநாதன் சந்தேகத்தின் பேரில் பணியாளர்களிடம் விசாரித்தார். மேலும், முசிறி டி.எஸ்.பி. தமிழ்மாறனும் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். ஏடிஎம்மையத்துக்கு அருகிலிருந்த எலெக்டிரிக்கல் கடை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.