குண்டர் சட்டத்தில் இருவர் கைது
By DIN | Published On : 30th March 2019 08:21 AM | Last Updated : 30th March 2019 08:21 AM | அ+அ அ- |

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியை அடுத்த அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பெ. சிலம்பரசன், ரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் கா. தினேஷ், செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ச. விவேக். இவர்கள் மூவரும் வழிப்பறி வழக்கில் அரியமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிலம்பரசன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 13 வழக்குகள் இருந்தும் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸார் பரிந்துரைத்தனர்.
அதேபோல காட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்த ஸ். ஜோன்ஸ் ஸ்டீபன் என்பவரை வழிப்பறி வழக்கில் கே.கே. நகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது காவல்நிலையங்களில் 8 வழக்குகள் பதிவாகியிருந்தும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரை
குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸார் பரிந்துரைத்தனர்.
இதனை ஏற்ற காவல் ஆணையர் அ. அமல்ராஜ், குண்டர் சட்டத்தில் சிலம்பரசன், ஜோன்ஸ் ஸ்டீபன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரையும் தண்டனைக் கைதிகள் பிரிவில் சிறையில் அடைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...