தமிழ்நாடு முத்தரையர் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 05th May 2019 03:16 AM | Last Updated : 05th May 2019 03:16 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலர் மரு.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீரங்கன் ரெங்கராஜ், மூர்த்தி, கோவிந்தராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மக்களவை தேர்தலின் போது கட்செவி அஞ்சல் மூலம் தவறான தகவல்களை பரப்பிய முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
பாலியல் குற்ற வழக்குகளை காலம் கடத்தாமல் விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.