திருச்சி விமானநிலையத்தில் ரூ. 41.71 லட்சம் கடத்தல தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை வந்த மலிண்டோ விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சிவகங்கையைச் சேர்ந்த சையதுஹுசைன்(23), சென்னையைச் சேர்ந்த முகமது முஸ்தபா(25) ஆகிய இருவரும் தலா 210 கிராம் வீதம் ரூ.13.31 லட்சம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதே போல சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புதுக்கோட்டை தீபக்குமார்(24), தஞ்சாவூர் பிரகாஷ்(23) ஆகிய இருவரும் தலா 449 கிராம் வீதம் ரூ. 28.40 லட்சம் தங்கத்தை ராடு வடிவில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
சனிக்கிழமை மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.41.71 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.