முசிறி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு யாகம்
By DIN | Published On : 05th May 2019 03:18 AM | Last Updated : 05th May 2019 03:18 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், முசிறி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மழை வேண்டி கோயில் நிர்வாகம், மக்கள் சார்பில் சனிக்கிழமை சிறப்பு யாக வேள்வி பூஜை செய்து சனிக்கிழமை வழிபட்டனர்.
தமிழக அரசின் உத்தரவின்பேரிலும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படியும் அங்காளம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் உமாராணி தலைமையில் திருஈங்கோய்மலை சேர்ந்த சுந்தமூர்த்தி சிவாச்சாரியார் குழுவினர் கோயில் முன் யாக மேடை அமைத்து வருணபூஜை நடத்தினர். அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வேள்வியில் முசிறி நகர பகுதி மக்கள் பங்கேற்றனர்.