ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர் சடலமாக மீட்பு
By DIN | Published On : 19th May 2019 08:37 AM | Last Updated : 19th May 2019 08:37 AM | அ+அ அ- |

திருச்சி நவல்பட்டில் முள்புதரில் ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
நவல்பட்டு ஈ.பி.பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள நவலிகுளம் முள்புதர் பகுதியில் சனிக்கிழமை ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற நவல்பட்டு போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவெறும்பூர் வட்டம், சோழமாதேவியைச் சேர்ந்த யாக்கப்பநாதன் (70) என்பதும், இவர் ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் என்பதும் தெரிய வந்தது.
தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் இவர் கொலை செய்து விட்டுச் சென்றார்களா என்பது குறித்து, நவல்பட்டு போஸீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கூலித் தொழிலாளி தற்கொலை: திருச்சி நவல்பட்டு அருகிலுள்ள பூலாங்குடி காலனியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமரவேல் (24), குடும்பப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நவல்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதியவர் சடலம் மீட்பு: திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்புப் பகுதி அருகில், சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக கண்டோன்மென்ட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் முதியவர் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து கல்லுக்குழி வடக்கு ரயில்வே காலனி ராமலிங்கம் அளித்தபுகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.