கைதியைப் பார்க்க வந்தவரிடம் கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 19th May 2019 08:35 AM | Last Updated : 19th May 2019 08:35 AM | அ+அ அ- |

திருச்சி மத்திய சிறையிலிருக்கும் கைதி ஒருவரைப் பார்க்க வந்தவர் வைத்திருந்த 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி முதலியார்சத்திரத்தைச் சேர்ந்தவர் தர்மா என்கிற தர்மராஜ் (26). இவர் மத்திய சிறையிலிருக்கும் கைதி ஒருவரைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை சிறை வளாகத்துக்கு வந்துள்ளார். அப்போது இவரை சோதனையிட்ட போது, இரு பொட்டலங்களில் 18 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறை வளாகத்தில் பணிபுரியும் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு வழக்குப்பதிந்து, தர்மா என்கிற தர்மராஜை கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.