திருச்சியில் ரூ.5.83 லட்சம் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2019 08:35 AM | Last Updated : 19th May 2019 08:35 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது பயணி ஷேக்மைதீன் (37) உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர் தனது உடைமைக்குள் 240 கிராம் எடையுள்ள ரூ.5.83 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, ஷேக் மைதீனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.