மனைவியைக் காணவில்லை என தேங்காய் வியாபாரி புகார்
By DIN | Published On : 19th May 2019 08:36 AM | Last Updated : 19th May 2019 08:36 AM | அ+அ அ- |

தனது மனைவியைக் காணவில்லை என தில்லைநகர் காவல் நிலையத்தில் தேங்காய் வியாபாரி புகார் அளித்துள்ளார்.
திருச்சி பழையபால்பண்ணை சாலை, மகாலெட்சுமி நகர் 2 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த யுவராஜ் மகன் புருஷோத்தமன் (28). இவரது மனைவி அனிதா (24). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. புருஷோத்தமன் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி தில்லைநகர் பகுதியிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அனிதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.