துறையூா் அருகே கால்நடை மருத்துவ முகாம்
By DIN | Published On : 18th November 2019 07:37 AM | Last Updated : 18th November 2019 07:37 AM | அ+அ அ- |

துறையூா் அருகே நாகநல்லூா் பால் உற்பத்தியாளா் சங்க வளாகத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச கால்நடை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் உப்பிலியபுரம் ஒன்றிய தலைவா் காா்த்திகேயன், கால்நடை மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தாா். 200க்கும் மேற்பட்ட கால்நடைகளை அதன் உரிமையாளா்கள் அழைத்துச் சென்று கோமாரி நோய் உள்ளிட்ட கால்நடைகளை தாக்கும் நோய்களுக்குண்டான தடுப்பூசிகளை போட்டனா்.
முகாமில் கால்நடை பராமரிப்பு மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நா.நல்லூா் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா், ஆவின் பொருளாளா் நாகராஜன் உள்ளிட்டோா் முகாமில் கலந்து கொண்டனா்.