பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 11th September 2019 09:08 AM | Last Updated : 11th September 2019 09:08 AM | அ+அ அ- |

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருச்சி கோட்ட ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், குறிப்பிட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - தஞ்சாவூர், தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில்கள் (ரயில் எண்: 76824 / 76827) செப்.14, 21, 28 ஆகிய நாள்களில் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி - காரைக்கால், காரைக்கால் - திருச்சி (76854 / 76853) பயணிகள் ரயில்கள் செப். 16 முதல் அக். 5 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், திருச்சி - மயிலாடுதுறை (56824) பயணிகள் ரயில் கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் செப். 26 முதல் 28 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
நேரங்களில் மாற்றம்: திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் (16234) திருவெறும்பூர் - சோலகம்பட்டி மாற்று வழித்தடத்தில் செப்.30 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமையைத் தவிர) இயக்கப்பட உள்ளது. மேலும், இந்த ரயில் 60 நிமிடம் தாமதமாக மயிலாடுதுறை சென்றடையும். மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில் (56821) சோலகம்பட்டி வழியாக செப்.30 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் 45 நிமிடம் காலதாமதமாக திருச்சிக்கு வந்தடையும்.
காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்(56711) காரைக்காலில் இருந்து வழக்கமாக 12.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடம் தாமதமாக நண்பகல் 1.50 மணிக்கு புறப்படும். அதோடு, செப்.16 முதல் அக்.5 ஆம் தேதிவரை 45 நிமிடம் காலதாதமாக திருச்சிக்குச் சென்றடையும். அதுபோல், திருச்சியிலிருந்து மாலை 6.25 மணிக்கு திண்டுக்கல்லுக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56703) செப்.16 முதல் அக்.5 ஆம் தேதி வரை 45 நிமிடம் தாமதமாக இரவு 7.10 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படவுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரயில் (56821) செப்.26,28,27 ஆகிய 3 நாள்களுக்கு 60 நிமிடம் தாமதமாக நண்பகல் 12.25 மணிக்கு புறப்படவுள்ளது. இந்த ரயில் 70 நிமிடம் தாமதமாக திருச்சியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.