திருச்சி எஸ் ஆர் எம் கல்லூரியில், பாரதியார் நினைவு சொற்பொழிவு

திருச்சி எஸ் ஆர் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியார் நினைவு  சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி எஸ் ஆர் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியார் நினைவு  சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,  பாரதியார் நினைவு  சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம் திருச்சி மற்றும் ராமாபுரம் கல்விக் குழுமங்களின் தலைவர் ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். 
கல்லூரியின் முதல்வர் சி.கே.கொற்றவேல் பாரதி வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெ. ரஞ்சனி அறிமுக உரையாற்றினார். 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர்  மன்சூர், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பாரதியின் கவிதைகள் குறித்துப் பேசுகையில், தமிழ்ச் சமூகச் சூழலுக்கு பாரதியின் பாடல்கள் மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது என்றார். கல்விக் குழும செயல் இயக்குநர் ஆர். ரகுபதி, இணை இயக்குநர் மருத்துவர் என்.பாலசுப்பிரமணியன், துணை முதல்வர்கள் ஜி. இளங்கோ, எஸ். லாரான்ஸ், என். ஆர். சக்திவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாரதியின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com