திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு

நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முறைகேடு செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து  திருச்சி கி.ஆ.பெ.வி. மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த 150 மாணவ,


நீட் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முறைகேடு செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து  திருச்சி கி.ஆ.பெ.வி. மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த 150 மாணவ, மாணவிகளின் ஆவணங்கள் சனிக்கிழமை மீண்டும் சரிபார்க்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்தவர் உதித்சூர்யா. இவர், நீட்தேர்வில் முறைகேடு செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து  மாநிலம் முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்கள் குறித்த விவரங்களும் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் மீண்டும் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதன்படி, திருச்சி கிஆபெவி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள 150 மாணவ, மாணவியரின் ஆவணங்கள் சனிக்கிழமை சரிபார்க்கப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆர்ஷியாபேகம், துறைத் தலைவர்கள் நிர்மலா (பயோ கெமிஸ்ட்ரி), சாந்தகுமாரி (பிசியாலஜி), ஆனந்தி (அனாடாமிக்) உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். சேர்க்கைக்கு முன்னர் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சரிபார்ப்பு பணி நடைபெறுவது மருத்துவ மாணவ, மாணவிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி
யுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com