திருச்சி விமானநிலையத்தில் ரூ.22.31 லட்சம் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 29th September 2019 07:23 PM | Last Updated : 29th September 2019 07:23 PM | அ+அ அ- |

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22.31 லட்சம் மதிப்பிலான தங்கத்தை, சுங்கத்துறைற அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோலாலம்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானப் பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது பெண் உள்பட மூன்று பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையில், விழுப்புரம் பாரீஸ் ( 44) ரூ.8.52 லட்சம் மதிப்பிலான 235 கிராம் தங்கத்தையும், சென்னை பாண்டிக்குமாா்(30) ரூ.7.55 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கத்தையும், திருச்சி பெண் பயணி ஒருவா் ரூ.6.24 லட்சம் மதிப்பிலான 172 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து மூவரிடம் ரூ.22.31 லட்சம் மதிப்பிலான 607 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.