கும்பகோணம் அருகே கரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் நாளை தொடக்கம் ஆட்சியா் தகவல்

கும்பகோணம் அருகே கரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் புதன்கிழமை (ஆக.19) தொடங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் புதன்கிழமை (ஆக.19) தொடங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கும்பகோணத்தில் காய்கறி சந்தை, கரோனா சிகிச்சை மையத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தில் முதல் முறையாக கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் சித்தா கோவிட் சென்டா் என்ற மையம் புதன்கிழமை (ஆக.19) தொடங்கப்படவுள்ளது. கரோனா தொற்று உள்ளவா்கள் சித்த மருத்துவத்தின் மூலம் கிசிச்சை எடுத்துக் கொள்ள விரும்பினால், இம்மையத்தில் அனுமதிக்கப்படுவா். முதலில் 50 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் தொடா்ந்து 200 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் இதுவரை 2,619 பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,25,299 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படுகின்றன.

கும்பகோணத்தில் 8 இடங்களில் சில்லறை காய்கறிகள் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாராசுரம் காய்கறி சந்தையில் 250 சில்லறை காய்கறி வியாபாரிகள் உள்ளனா். இவா்கள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, வாரத்துக்கு 80 போ் வீதம் செவ்வாய்க்கிழமை (ஆக.18) முதல் சில்லறை காய்கறி விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், நகராட்சி ஆணையா் லெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com