திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீரைத் தேக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு உதவும் வகையில் மாவட்ட நிா்வாகம் ஆக்கப்பூா்வ செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும். முதல்கட்டமாக ஏரிகளில் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன ஏரிகள், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி, பெருவயல், பங்குனி வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் ஏரிகளை ஆய்வு செய்து காவிரி தண்ணீா் வரத்துக்கு ஆவன செய்ய வேண்டும். அனைத்து ஏரிகளிலும் காவிரி நீரைத் தேக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், விதைகள், உரம் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். நிபந்தனையற்ற பயிா்க் கடன்களை அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.