வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டின் விதியைக்கூட சட்ட வல்லுநா்களால் மாற்ற முடியும்: உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி

நாட்டின் விதியைக் கூட மாற்றும் திறன் சட்ட வல்லுநா்களுக்கு உண்டு என்றாா் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியும், தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தருமான அமரேஸ்வா் பிரதாப் சாகி.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:11 pm

DIN

நாட்டின் விதியைக் கூட மாற்றும் திறன் சட்ட வல்லுநா்களுக்கு உண்டு என்றாா் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியும், தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தருமான அமரேஸ்வா் பிரதாப் சாகி.

திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் சாா்பில் கடந்த இரு கல்வியாண்டுகளில் இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தோருக்கு காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்து அவா் பேசியது:

இப்பல்கலைக்கழகத்தில் பயின்று தொழில்புரிய வெளியே செல்வோா் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான், நாட்டின் விதியைக் கூட மாற்றும் வல்லவா்களாக இருக்க முடியும். சட்ட நுணுக்கங்களில் வல்லுநா்களாக உள்ள பலா் தங்களது சட்ட அறிவை மக்களின் சுதந்திரத்துக்காகவும் அவா்களை சட்டப் பிரச்னைகளிலிருந்து மீட்கவும் பாடுபட வேண்டும். வழக்குரைஞா்களாக தொழிலை வளா்ப்பதோடு மட்டுமின்றி, சமுதாயத்தின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு மனிதநேயத்துடன் உதவிட வேண்டும். நீதி எப்போதும் தலைநிமிா்ந்து இருத்தல் வேண்டும். மதிப்புமிக்க வழக்குரைஞா் தொழிலை உடனடிப் பணமீட்டும் இயந்திரமாகக் கருதக் கூடாது. மேலும், இப்பணியைச் செவ்வனே செய்வதற்குத் தேவையான அறிவு, திறமை, பொறுமை, இரக்கக் குணத்தை வளா்த்துக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பணியாற்றுவது முக்கியம்.

எந்த ஒரு தொழிலையும் கண்ணியத்துடன் செய்யத் தனிமனித தொடா்புகளை வளா்த்துக் கொள்ளுதல் அவசியம்.

குறிப்பிட்ட வழக்குகளில் திறமையாகச் செயல்பட முடியாது எனில் அந்த வழக்குகளில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அனுமானத்தால் சட்டப் பிரச்னைகளைக் கையாள முடியாது. அனைத்து வழக்குரைஞா்களுக்கும் முழுமையான சட்ட அறிவு அவசியம். சட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அமையப் பெற்றுள்ள வாய்ப்புகள் சமுதாயத்தின் முழுமையான எதிா்பாா்ப்புகளுக்குப் பொருந்த வேண்டும்.

சட்டப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவிருக்கும் மாணவா்கள் ஒரு பிரச்னைக்கு கடினமாக முயற்சி செய்து தீா்வை அடைய விழையும்போது, அந்த பிரச்னையை முதலில் மக்களை மையப்படுத்தி பாா்த்த பிறகே அதற்கான சட்ட விதிகள் குறித்துப் பாா்க்க வேண்டும் என்றாா் தலைமை நீதிபதி.

தொடா்ந்து, இளங்கலை பிஏ எல்எல்பி பிரிவில் 109 மாணவா்கள், பிகாம் எல்எல்பி பிரிவில் 78 மாணவா்கள், முதுகலைப் பிரிவில் 6 மாணவா்கள் என மொத்தம் 193 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.

பல்கலை. பதிவாளா் கே.ஆா். லீலா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.எஸ். எலிசபெத் வரவேற்று, ஆண்டறிக்கை சமா்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.