வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு உரசி பெண் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது துப்பாக்கிக் குண்டு உரசி பெண் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:12 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது துப்பாக்கிக் குண்டு உரசி பெண் படுகாயமடைந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையம் வனப்பகுதியில் ஐ.என்.எப். சிறப்புப் படையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி டிச. 4 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை பயிற்சி நடைபெற்ற பகுதிக்கு தனது கால்நடையைத் தேடிவந்த மலையடிவாரத்தில் வசிக்கும் வெள்ளைக்கண்ணு மனைவி நல்லம்மாள் (36) தொடையில் துப்பாக்கிக் குண்டு உரசி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து அருகிலிருந்தோரால் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.