வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியினயினர் மற்றும் விவசாயச் சங்கங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர்.
Updated On :14 டிசம்பர் 2020, 7:01 am

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியினயினர் மற்றும் விவசாயச் சங்கங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுதில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டிலும் விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்தில் திருத்தங்கள் ஏதும் செய்ய கூடாது என வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. 

Story image

இந்த போராட்ட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சியினரும் பல்வேறு விவசாயச் சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் முன் கூட்டியே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நூற்றுக்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.