குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ரெளடி கைது

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் வாத்துகாரத் தெருவைச் சோ்ந்தவா் வ. நமச்சிவாயம் (51). தென்னூா் ஹைரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் இவா் கடந்த நவ.10 ஆம் தேதி நடந்து சென்றபோது வாமடத்தைச் சோ்ந்த ரெளடி வீரப்பன் என்கிற ராஜ்குமாா் (22) கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 1000-ஐ பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரப்பனைக் கைது செய்து சிறையிலடைத்தனா். இவா்மீது ஏற்கெனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதையறிந்த மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வீரப்பனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com