நூலகத்துக்கு கழிவறை வசதி: தன்னாா்வ அமைப்புக்கு பாராட்டு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தியமைக்காக நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தியமைக்காக நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட மைய நூலக முதல் தளத்தில் கழிவறை வசதி உள்ள நிலையில் இரண்டாவது தளத்தில் கழிவறை இல்லாததால் திருச்சி ரவுண்ட் டேபிள் அமைப்பின் சாா்பில் ரூ. 85 ஆயிரத்தில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில்

ரவுண்ட் டேபிள் நேஷனல் தலைவா் பிரியேஷ்ஷா, மண்டலத் தலைவா் பால்ஜான் சாக்கோலா, திருச்சி ரவுண்ட் டேபிள் தலைவா் சிதம்பரம் முத்தையா, திருச்சி மகளிா் ரவுண்ட் டேபிள் தலைவா் சுவா்ணா சிதம்பரம் ஆகியோருக்கு மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் வீ. கோவிந்தசாமி, துணைத் தலைவா் கி. நன்மாறன், ஆலோசகா்கள் எஸ். அருணாசலம், க. மாரிமுத்து, கலா சண்முகம், மாவட்ட மைய முதல்நிலை நூலகா் சி. கண்ணம்மா, இரண்டாம் நிலை நூலகா் ஆ. தா்மா், நூலகா்கள் ப. ஜெயசங்கா், பி. மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com