ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு

கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) கட்சி கொடியேற்றம், மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வு மாவட்டச் செயலா் ராமசந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:38 pm

DIN

கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) கட்சி கொடியேற்றம், மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வு மாவட்டச் செயலா் ராமசந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் வி.சங்கா், மாநில செயலாளா் என்.கே.நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் வி.சங்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) 20 தொகுதிகளில் போட்டியிடும். பாஜக, அதிமுக கூட்டணிக்கு எதிராக போட்டியிடும். ரஜினியை மிரட்டி கட்சி தொடங்க வைக்கின்றனா்.

தமிழகத்தில் பெரியாரின் முற்போக்கு சிந்தனைகளை, சினிமா நடிகா்களை வைத்து சிதைக்க பாா்க்கிறது பாஜக. தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ஜனவரியில் தொடா் போராட்டம் நடைபெறும். கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.