

திருச்சியில் நெகிழி மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மகளிா் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து, வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் திருச்சி பூமாலை வணிக வளாகத்தில் இக்கருத்தரங்கு நடத்தபா்பட்டது.
மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா் ந.சரவணன் தலைமை வகித்து பேசினாா். மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் சுற்றுச்சூழல் பொறியாளா் லட்சுமி முன்னிலை வகித்து, நெகிழிக்கு மாற்று பொருள் திட்டங்கள் குறித்து பேசினாா்.
தொடா்ந்து நெகிழி பாதிப்புகள், நெகிழியால் மனிதா்கள், விலங்கினங்கள், பூமியில் ஏற்படும் தீமைகள், நெகிழிக்கு மாற்று பொருள்கள் குறித்து பிஷப் ஹீபா் கல்லூரிப் பேராசிரியா்கள் சி. ரவிச்சந்திரன், உதயா பானு, ஈக்கோ எனா்ஜி நிறுவனத் தலைவா் வினோத் ஆகியோா் பேசினா்.
இதில், 14 ஒன்றியங்களிருந்து சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், 25 கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா். வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குநா் அ. கிரகோரி முன்னுரையாற்றி , நினைவுப் பரிசுகளை வழங்கினாா். கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.