திருச்சி விமானநிலையத்தில் ரூ.11.54 லட்சம் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணத்தாள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை திருச்சி வந்த ஏா் இந்திய விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது பட்டுகோட்டையச் சோ்ந்த தாமரைசெல்வன்(24) என்பவா் ரூ.4.46 லட்சம் மதிப்புடைய 109 கிராம் தங்கத்தை கம்பி வடிவில் தயாரித்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
வெளிநாட்டு பணத்தாள்: இதே போல புதன்கிழமை மாலை திருச்சியிலிருந்து சிங்கப்பூா் செல்லவிருந்த இண்டிகோ விமானப் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா். அப்போது, ஆண் பயணி ஒருவா் மலேசிய ரிங்கிட், சிங்கப்பூா் டாலா் என ரூ.7.08 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தாள்களை மறைத்து கடத்தவிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சோதனையில் சிக்கிய தங்கம், வெளிநாட்டு பணத்தாள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.