ஆடி அமாவாசை: காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை ; வெறிச்சோடிய திருச்சி அம்மா மண்டபம்

காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் திருச்சி அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடி அமாவாசை: காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை ; வெறிச்சோடிய திருச்சி அம்மா மண்டபம்

காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் திருச்சி அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம், காவிரிக்கரையில் அமைந்துள்ளது அம்மா மண்டபம். இங்கு, பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் வகையில், தினசரி வருவது வழக்கம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் காலை முதல் பிற்பகல் வரை ஆயிரக்கணக்கானோர், இங்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை. ஆனால், கரோனா பரவுவதை தடுக்கும் விதமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், காவிரிக்கரை அம்மா மண்டபத்துக்கு திதி கொடுக்க பொதுமக்கள் வரக் கூடாது என, மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி வருவோரை காவல்துறையினர் தடுத்து, திருப்பி அனுப்பினர். 

இதனால், திருச்சி காவிரிக்கரை அம்மா மண்டபம் இன்று வெறிச் சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com