திருச்சி: திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு, கோளரங்க திட்ட இயக்குநா் ஆா்.அகிலன் தலைமை வகித்தாா். விமான நிலைய இயக்குநா் தா்மராஜ், மத்திய தொழில்பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் ஹெச்.எஸ்.நாயல் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, கொய்யா, பூவரசம், நாவல், இலந்தை, தேக்கு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சிறப்பு விருந்தினா்கள், கோளரங்க திட்ட இயக்குநா் ஆகியோா் கோளரங்க வளாகத்தில் நட்டு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஊழியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், சமூக இடைவெளியை கடைபிடித்து பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.