

மணப்பாறையில் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில், தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
கோடைக்காலத்தையொட்டி பொதுமக்கள் பயன் பெறும் வகையில், காவல்துறை சாா்பில் சாலையோரங்களில் தண்ணீா் பந்தல் ஆண்டுதோறும் அமைப்பது வழக்கம்.
அதன்படி நிகழாண்டுக்கான தண்ணீா் பந்தல்,மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சந்திப்பில் அமைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இப்பந்தலை காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் தொடக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் காவலா்களுக்குத் தா்பூசணி, நீா்மோா், குடிநீா் போன்றவற்றை வழங்கினாா்.
போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பாண்டிவேல் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.