

திருச்சியில் நகரும் பண்ணை பசுமைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கனிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை பெறுவதற்காக சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிவதை தடுக்க நடமாடும் பண்ணை பசுமை கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக திருச்சி மாநகரப் பகுதி மக்களுக்கு காய்கனிகளை விற்பனை செய்யும் வகையில் 5 நகரும் பண்ணை பசுமைக் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.20, புடலங்காய் கிலோ ரூ.20, பச்சை மிளகாய் கிலோ ரூ.15, கத்தரிக்காய் கிலோ ரூ.25, பீரக்கங்காய் கிலோ ரூ.25, வெண்டைக்காய் கிலோ ரூ.40, பாகற்காய் கிலோ ரூ.25, அவரை கிலோ ரூ.55 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மாநகரப் பகுதிகளில் செவ்வாயக்கிழமை முதல் இந்த கடைகள் அமலுக்கு வந்துள்ளன. திருச்சி மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பகுதிக்கும் இந்த பண்ணை பசுமைக் கடைகள் வர வேண்டுமெனில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
திருச்சி மாவட்ட அமராவதி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை- 98652-72820, திருச்சி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (சிந்தாமணி)- 848944-64127, ரெங்கநாதா கூட்டுறவு பண்டக சாலை- 70100-01506, திருவானைக்கா கூட்டுறவு பண்டக சாலை- 97156-28572, தமிழ்நாடு அரசு அலுவலா்கள் கூட்டுறவு பண்டக சாலை- 94435-30459.
ஆகவே, பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கனிகளை பெற்று பயன்பெறலாம் என திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.