மணப்பாறையில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 12th August 2020 08:40 AM | Last Updated : 12th August 2020 08:40 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு பாஜக நகரத் தலைவா் சின்னசாமி தலைமையில் பாஜகவினா் பேருந்து நிலையம் அருகிலுள்ள முனியப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.
மாவட்டத் தலைவா் சி.ஆா். ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலா் சி. செந்தில்தீபக், மாவட்ட துணைத் தலைவா் லலிதா அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிறுவா், சிறுமிகள் கோகுல கண்ணன் வேடமிட்டிருந்தனா்.